கொஞ்ச நேரம் என் தோளில்!
கொஞ்ச நேரம் என் தோளில்! நீண்ட தூர நடைபயணம் அது! பேருந்தை நிறுத்தி விட்டார்கள் ரயிலும் இல்லை! சுமார் 200 கிமீ நடந்துவிட்டோம் இன்னும் கொஞ்ச தூரம் தான் ! அந்த பிஞ்சுவிரல்கள் என்னைப்பார்த்து அசைத்தது! கண்கள் சோர்வானதால் முகம் தெரியவில்லை! மழலை அழைப்பு ஒரு தோளில் இருந்து! எனக்கு மணமாகி 40 வருடமாச்சு என்னவள் மட்டும்தான் எனக்கு பிள்ளை! அகத்தில் இருந்து ஒரு குரல் அவள் எங்கே சென்றால்? அருகில் தான் இருந்தால் பதறிவிட்டேன்! குழந்தையை பிடியம்மா என்று ஒரு குரல்! அவளுக்கு முன் என் தோளில் கொஞ்ச நேரம்! மாறி மாறி தோளில் சுமந்தோம் கடவுளுக்கு நன்றி சொன்னோம் அந்த கணத்துக்க்காக! குழந்தையை பெற்றவள் கேட்டாள் போதுமா என்று! கடவுள் ஏற்றுக்கொண்டார் நன்றியை! இன்னும் ஒரு முறை 1000 கிமீ நடக்கலாம் தேவதையை சுமக்க!